தமிழ்லீடர்

உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் மக்கள்!

உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு இன்று யாழ்ப்பாணத்தில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நாம் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து, உறவுகளை பறிகொடுத்து தற்போதுவரை தமது உறவுகள் எங்கே என தெரியாத நிலையில் நடைபிணமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் உதவிகளும் எமக்கு கிடைப்பதில்லை என்பதோடு தாம் வறுமையிலேயே வாழ்கின்றோம். எமது நிலையை கருத்திற்கொண்டு தமக்கு உதவி செய்ய “நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வரவேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: