தமிழ்லீடர்

ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே ஒரு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

மேற்படி இலங்கை அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே ஒரு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஆவார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என அவ்வமைப்பினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இவ்விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அதுல த சில்வா குறிப்பிடுகையில்.ஒட்டு மொத்த மக்களும் மாகாண சபை தேர்தலை கோரும் பொழுது அரசாங்கம் தேவையற்ற ஒரு அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இன்று பொதுஜன பெரமுன முன்னணியே பிரதான கட்சியாக காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் இக்கட்சியே அரசியலில் அதிகாரம் செலுத்தும் என்பதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. இன்று ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கம் ஒரு தரப்பினரது தேவைகளுக்காகவே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: