தமிழ்லீடர்

ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்.

    திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில், ​இன்று (26) ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையம் மற்றும் வடக்கு, கிழக்கு,கொழும்பு ஊடக அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று (26) காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் நிகழ்வாக, யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அதிரன், கொழும்பு ஊடக அமைப்பைச் சேர்ந்த பெடி ஹமகே ஆகியோரால் ஊடகவியலாளர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊடகவியலாளர் சுகிர்தராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர் ஜெககேஸ்வரன், பொதுச்சுடரை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.             

Add comment

Recent Posts

%d bloggers like this: