தமிழ்லீடர்

எட்டு வருட சிறைத் தண்டனை உத்தரவு விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்.

மூவாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எட்டு வருட சிறைத் தண்டனை உத்தரவு விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இந்த தீர்ப்பு உத்தரவினைப் பிறப்பித்துள்ளதுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளியான பொலிஸ் கன்ஸ்டபிளுக்கு எதிராக போக்குவரத்து முறையை மீறி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள் நடந்த இந்த லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.

குற்றவாளிக்கு எதிராக நான்கு பிரிவுகளில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இப்போதே குறித்த பொலிஸ் கன்ஸ்டபிளுக்கு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: