தமிழ்லீடர்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷ  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு எதிர்த் தரப்பில் இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அதன் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால்  பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.

இலங்கையில் எதிரெதிரான அரசியல் தரப்பும் ஓரணியில் இருந்ததால்,தமிழ்த் தேசியக் கூட்டணி 16 எம்.பி.க்களின் அந்தஸ்தைப் பெற்றிருந்தன.

தற்போது  ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்றி விட்டாலும், முன்பு போல ராஜபக்ஷ, மைத்ரிபால ஆகியோர் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அவர்களுடன் கூட்டணியில் இல்லை. தற்போது இந்தக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வரிசையில் உள்ளன.

அரசியல் திருப்த்தத்தில் முன்பு இந்தக் கூட்டமைப்பு 96 எம்.பி.க்களைக் கொண்டிருந்தனர். தற்போது அரசியல் குழப்பங்களில் இவர்களில் 6 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் தரப்புக்கு 90 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் ராஜபக்ஷேவை எதிர்க் கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்துவிட்டார். முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் ஆதரவில் இருந்துள்ளார்கள்.

வியாழேந்திரன் ராஜபக்ஷ தரப்புக்கு சென்ற நிலையில் 15 எம்.பி.க்கள் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளார்கள்.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்பு இருந்து வந்த மஹிந்த ராஜபக்ஷே, கட்சிக்குள் ஆதரவு குறைந்த காலத்தில் பொதுஜன பெரமுன என்ற தனி அரசியல் அமைப்பைத் தொடங்கினார்கள்.

இப்போது  அமைப்பின் உறுப்பினராக இருப்பதாலும் கட்சிக்கு போதிய பலம் இல்லை என்பதால் அவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தேர்வான ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக நியமித்தார். இது சம்மந்தமான தீர்மான முடிவுகள் வெள்ளிக்கிழமை தெறிவிப்பதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்ய தெறிவித்துள்ளார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: