தமிழ்லீடர்

எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீங்கிக்கொள்ளவேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பொறுப்பை வகிக்கும் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதில்லை. எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இந்நிலையில், கூட்டமைப்பு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியிருந்தார் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை போன்று செய வேறு எங்கும் நடந்தது இல்லை என சுட்டிக்காட்டினார்.

 

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: