தமிழ்லீடர்

எதிர்ப்பால் மாத்தறை இருந்து திரும்பினார் அமைச்சர்!

மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜீன் ரணதுங்க ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மஹிந்த  ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை என மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கண்காணிப்பு ரயிலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விடப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Add comment

Recent Posts

%d bloggers like this: