எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கப்போவதில்லை.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு.

மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவை வழங்கப்போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் புதல்வர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜீ.எல். பீரிஸ் தலைமை பொதுஜன பெரமுண, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரே முகாமைத்துவத்தில் போட்டியிடப்போவதாக முன்னர் அறிவிவத்திருந்தனர். இதனை பசில் ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தாம் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும். கட்சிக்குள்ளே மோதல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: