தமிழ்லீடர்

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனவும் இணைந்து போட்டியிடுவதை குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்படி எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

எனினும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிரும்புவர்கள் கட்சியிலிருந்து விலகிய பின்னர் அதனை செய்யலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துள்ளனர்.

இது குறித்த தங்கள் அதிருப்தியை அவர்கள் பொதுச்செயலாளர்களிடம் வெளியிட்டுள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: