தமிழ்லீடர்

எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே!

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயமும் நடந்துவிடக்கூடாது , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது.

தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த மக்கள் எந்தவொரு அரசாங்கத்தோடும் இணைந்து அமைச்சர்களை பெறாமல் இன்று வரையும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலைகளில் நீங்களும் ஆளுனராக நியமிக்கபட்டுள்ளீர்கள், தமிழ் பேசும் ஒருவர் நேற்று ஆளுனர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை அறிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் ஒற்றுமையை வளப்படுத்தி தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் , அடிப்படை பிரச்சனைகள், சுகாதாரப்பிரச்சனைகள், கல்வி தெடர்பான பிரச்சனைகள், நிர்வாக பிரச்சனைகள் போன்றவற்றில் அதிகளவு அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் அவர் மிகவும் நீதி, நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்பாடதவகையிலும், செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.                               

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: