தமிழ்லீடர்

எரிபொருளின் விலை குறைந்தும் பஸ் கட்டணம் குறையவில்லை!

இலங்கை அரசியல் நெருக்கடியால் மக்கள் மற்றும் பல்வேறு துறைகளும் பல சிக்கலான பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர் நோக்குகின்ற நிலையில் தற்போது போக்குவரத்து தொடர்பான விடயங்களில் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன.

இது வரையில் அரசாங்கத்தால் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனெனில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எரிபொருட்கள் விலை குறைக்கப்பட்டதால் 100க்கு 3 வீதம் மாத்திரம் குறைக்க முடியும் ஆனாலும் உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணம் 100க்கு 3 வீதம் கூட குறைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தின் குறைப்பு சம்பந்தமாக தீர்மான எடுப்பதற்கான கலைந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணையத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: