தமிழ்லீடர்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை!

தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டன என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.                           

Add comment

Recent Posts

%d bloggers like this: