தமிழ்லீடர்

எரிபொருள் விலை கூடுமா? அல்லது குறையுமா? அச்சத்தில் மக்கள்!

எரிபொருள் விலை பற்றிய முடிவை எட்டும் வகையில் இன்று (11) பிற்பகல் விலை சூத்திரத்துடன் சம்பந்தமான குழு ஒன்றுகூடவுள்ளது.மேற்படி குறித்த ஒன்றுகூடலில் எரிபொருள் விலையேற்றம் அல்லது விலை குறைப்பு பற்றிய முடிவு எட்டப்படவுள்ளது.

மேலும் எரிபொருள் விலை தீர்மாணிக்கும் குழுவானது மாதாந்தம் 10ம் திகதி ஒன்றுகூடி தீர்மாணங்களை எடுப்பது வழக்கமாக இருப்பினும் நேற்றைய தினம் வாராந்த விடுமுறை நாள் என்பதால் இன்று ஒன்றுகூடவேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 10ம் திகதி டீசல் மற்றும் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை தலா இரண்டு ரூபாவினால் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: