தமிழ்லீடர்

ஏறாவூரில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் விளக்கமறியலில்!!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்கள் உட்பட ஹரோயிடன் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் விளக்கமறியலில்.

மேற்படி காவல்துறைப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை குறித்த நபர் முற்றுகையிடப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் இருந்து ஒரு கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 10, வாள்கள் 3,70 மில்லிக் கிராம் ஹரோயின் என்பனவற்றை கைப்பற்றியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர் விபுலானந்தா வீதி ஜயங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகனதாஸ் ஜெகாந்தன் எனவும்,எனினும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: