ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி!

ஐக்கிய தேசிய  முன்னணி ஆட்சி அமைப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

 

நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவராக மஹிந்த ராஜபக்ச இல்லையென்பதை சுட்டிக்காட்டி, ஒக்ரோபர் 26ம் திகதிக்கு முன்னைய நிலவரத்தை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனையை தீர்க்க வழியென்றும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,ஒப்ரோபர் 26ம் திகதிக்கு முந்தையை நிலமையை ஏற்படுத்தும்படியும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவு உள்ளதென்பதையும் குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதின்னான்கு உறுப்பினர்களும் கையொப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

ஐக்கிய தேசிய முன்னணியில் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கும்படியும் அந்த முன்னணிக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: