தமிழ்லீடர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை!

இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்போது நடைபெறுகின்றது. 

இதன் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள விசேட உரை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: