ஐ .நா வில் ரணிலின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கனக ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு  வழங்கிய வாக்குறுதிகளின் ஊடாக ஏற்பட்ட நெருக்கடிகளின் மீதான அழுத்தம் அடுத்த அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தும்.

மேலும், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அரசாங்கம் முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமையானது இலங்கைக்கே பாரிய பாதிப்பாக அமையும்.

அந்தவகையில் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகின்றது

இதேவேளை தேர்தல் நடத்தப்படாதமை குறித்து எவரும் கவனத்திற்கொள்வதில்லை.

ஆனால், தேர்தல் நடைபெற்றால், ஆட்சி மாற்றம் இலங்கையில் நடைபெறுவது உறுதி. அப்போது மக்களின் நலன்கள் மாத்திரமே கவனத்திற்கொள்ளப்படும்” என கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: