கஜா புயல் தாக்கும் அபாயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிளும், இதன்படி யாழ் குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேசமயம் நாட்டின் வடக்கு தொடக்கம் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் (km) வேகத்தில் வீசப்படும்
அத்துடன், கிழக்கு கடற்கரை பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் (km)வரை அதிகரிக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்கரை பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: