தமிழ்லீடர்

கஜேந்திரகுமாரின் அடியாளாக மாறிய பேரவையின் லக்ஸ்மன்!

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்திற்கு நேற்றுச்  சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும் அநாகரிகமாக தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பாளர்கள் வெளியேற்றிய சம்பவம்

தமிழ் மக்கள் பேரவையிலிருந்த புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புக்களை வெளியேற்றிவிட்டு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் போட்டியிட வைக்கும்  நகர்வொன்றை ஆரம்பித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பின் அழுத்தத்துக்கு அடிபணிந்து இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஸ்மன் அவர்கள் எடுத்திருந்தார்.

கடந்தகால தேர்தல் நடவடிக்கைகள் குறித்த மீளாய்வு என்ற பெயரில் இரண்டு கட்சிகளையும் வெளியேற்றும் முயற்சிகளை தமிழ் மக்கள் பேரவையினர் ஆரம்பித்தனர்.

18-11-18 அன்று  மாலை 3 மணிக்கு கந்தர்மடத்தில் இருந்த தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு புளொட் சார்பில் கட்சியின் செயலாளர் பவானந்தன், கட்சியின் பொருளாளரும் வடக்கு முன்னாள் விவசாய அமைச்சருமான க.சிவநேசன் ஆகியோர் சென்றிருந்தனர். எனினும், அவர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது, கட்சி தலைவரே (த.சித்தார்த்தன்) கூட்டத்திற்கு வர வேண்டுமென, பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பூ.லக்ஸ்மன் குறிப்பிட்டார்.

“தமிழ் மக்கள் பேரவையின் முதல் கூட்டத்திற்கும் நானே வந்தேன். தலைவர் தவிர்ந்தவர்கள் வர முடியாதென்றால் அதை முதலிலேயே அறிவித்திருக்க வேண்டுமே. புளொட் சார்பில் சித்தார்த்தன் அல்லது நான்தான் வருவோமென ஏற்கனவே எழுத்து மூலமும் அறிவித்திருக்கிறோம் அல்லவா?“ என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் சிவனேசனின் கேள்வியை உள்வாங்கத் தயாராய் இல்லாத நிலையில் லக்ஸ்மன் அவர்கள் இருந்ததால், புளொட் பிரதிநிதிகள் இருவரும் கூட்டத்திலிருந்து வௌியேறினர்.

தமிழ் மக்கள் பேரவையின் கடந்தகால கூட்டங்களிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 30 வருடங்களிற்கும் அதிகமாக புளொட் அமைப்பில் அங்கத்துவம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

புளொட் பிரதிகள் திருப்பி அனுப்பப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் சற்று நேரம் கழித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன் கூட்டத்திற்கு வந்தார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சர்வேஸ்வரன்  வந்தார்.  சர்வேஸ்வரனையும் பேரவை ஏற்பாட்டாளர்கள் இடைமறித்து, கலந்து கொள்ள முடியாதென அறிவித்தனர்.

அந்த இடத்திலிருந்தபடியே தொலைபேசியில் தனது சகோதரனான சுரேஷ் பிரேமச்சந்திரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தொலைபேசியில் க.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு, விடயத்தை சொன்னார். இதையடுத்து, விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிட்டு, சர்வேஸ்வரனை உள்ளே அனுமதிக்க சொன்னார்.

இதன்போது, ஏற்கனவே புளொட் பிரதிநிதிகள் திருப்பியனுப்பப்பட்ட விடயத்தை ஏற்பட்டாளர்கள் கூறினார்கள். இதற்கு அங்கிருந்த பிரதிநிதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தவிர்ந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விடயம் தனக்கு தெரியாமல் நடந்து விட்டதென க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு, அப்படி திருப்பியனுப்பியது பிழையானதென்றார்.

இதையடுத்து, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடும்போது- “ஒரு தவறு நடந்து விட்டது. எமது தரப்பில் பழை நடந்ததை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களிப்பு நடந்தால், தலைவர்கள் தேவையென்பதால் அப்படி நடந்து விட்டோம். உடனடியாக புளொட் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டோம். திரும்பி வரும்படி கேட்டோம். அவர்கள் கூட்டம் நடக்குமிடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக கூறினார்கள்“ என்றார்கள்.

Add comment

Recent Posts

%d bloggers like this: