திருகோணமலை – இலிங்கநகர் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு இன்று நீதவான் 6000 ரூபாய் தண்டம் அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் தலைமையக பொலிஸார் சந்தேக நபரை ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1060 மில்லி கிராம் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபருக்கு முன் குற்றங்கள் ஏதும் இல்லாதபடியால் அவருக்கு நீதிவான் 6000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.