தமிழ்லீடர்

கஞ்சா கோப்பி விற்பனை பெண் கைது!

கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று  மாலை 06 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய போதை வஸ்துக்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரத்நாயக்கா உள்ளிட்ட குழுவினர் நிந்தவூர் பிரதேசத்தில் கஞ்சா கோப்பி விற்பனை செய்த வீடு ஒன்றை சுற்றி வளைத்த போதே போதை வஸ்துகளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா கோப்பி மற்றும் பக்கட்டுக்கள், பண்ணப்பட்ட  2 கிராம் நிறை உடைய கஞ்சா கோப்பி 35 பக்கட்டுக்களும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சுற்றி வளைப்பு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.K இப்னு அஸாரின் அவர்களின் மேற்பார்வையிலே நடைபெற்றுள்ளது. மேலதிக
விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Add comment

Recent Posts

%d bloggers like this: