தமிழ்லீடர்

கடமைக்கு சென்றவரை காட்டுயானை தாக்கியது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் உள்ள கணேஷா வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பழுகாமத்தை சேர்ந்த வன்னியசிங்கம் வினோதன் இன்று(29) காலை 7.00 மணியளவில் கடமைக்கு சென்றிருந்தார்.

பாடசாலைக்கு சென்றவரின் மோட்டார்சைக்கிளை காட்டுயானை பட்டப்பகலில் தூக்கிவீசியும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது.

இதன் போது திக்கோடை 50வீட்டுத்திட்ட பகுதியில் எதிரே காட்டு யானை வந்தது யானையைக் கண்டு பயந்துபோனவர் வீதியில் மோட்டார்சைக்கிளை வைத்து தப்பியோடியுள்ளார்.

ஆத்திரமடைந்த காட்டுயானை மோட்டார்சைக்கிளை தூக்கிவீசி சேதப்படுத்தியுள்ளது இதனால் உரியவரின் வாகனம் சேதமடைந்துள்ளது.

இதனால் மோட்டார்சைக்கிளில் பயணித்த வ.வினோதன் அதிஸ்டகரமாக காட்டுயானையிடமிருந்து தப்பித்துள்ளதுடன் அவருடைய மோட்டார் சைக்கிளை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

இந்த சம்பந்தம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானையினால் தொடர்ச்சியாக பொதுமக்கள்,அரச ஊழியர்கள் காட்டுயானையின் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் மத்தியில் தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகின்றார்கள்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: