தமிழ்லீடர்

கடற்படையினரால் கஞ்சாப்பொதிகள் மீட்பு!

மன்னார் வங்காலை கடற்பகுதியில் 184 கிலோ 200 கிராம் நிறையுடைய சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபரையும் கடற்படையினர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளை
வங்காலை பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: