தமிழ்லீடர்

கடற்படை அதிகாரிகளால் கடலட்டைகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில், கடலட்டைகளை பிடித்து அவற்றை ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்ற இருவரை, கற்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி- முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்தே, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக. கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, உரப்பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த, 598 கிலோ கிராம் கடலட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கற்பிட்டி ,உக்குவலை  ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 42, 44 வயதுடையவர்களே, கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: