கடலினுள் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட நகரம்!!!

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சீனாவால் உருவாக்கப்பட்டுவரும் துறைமுக நகரம் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேற்படி கொழும்பின் கடலினுள் தனியாக தீவு ஒன்று அமைத்து அதில் பல வசதிகளையும் கொண்ட நகரம் ஒன்றை சீனா அமைத்துவருவது தெரிந்த விடயமே.எனினும்

சீனா சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் என்பன இந்த இடத்தில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு அது அச்சுறுத்தலாகவே அமையப்போகின்றது என்பது படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாக விளங்குகின்றது.

எனவே இந்த துறைமுக நகர் நிர்மாணிப்பின் காரணமாக இலங்கையின் பூகோள வரைபடத்தில் கடந்த ஆண்டு மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: