கடலில் நீராடிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடிய மாணவன் அலையில் அள்ளுண்டுச் சென்று சடலமாக நேற்றுக் காலை மீட்கப்பட்டதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம்  காட்டப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றபோது, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: