தமிழ்லீடர்

கடும் சீற்றத்தில் மைத்திரி! கென்யாவில் இருந்து நாடுதிரும்பியதும் அவரச கூட்டம்

கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடிவு செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றம் அடைந்துள்ளார்.

மேற்படி கென்யாவில் இருந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் இதேவேளை நாடுதிரும்பியவுடன் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் மஹிந்த தரப்புடன் அரசியல் கூட்டணி பேச்சுக்களை தொடர்வதா இல்லையா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படவுள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: