தமிழ்லீடர்

கட்சி விட்டு மாறும் பாறாளுமன்ற உறுப்பினர்கள்.

மகிந்த ராஜபக்சவின் கட்சிக்கு தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.வியாழேந்திரனும், கட்சி விட்டி கட்சி தாவி, அமைச்சர் பதவியை கைவசமாக்கினார்.

எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மைத்திரி,மகிந்த கூட்டணி அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை அடுத்து, இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், முன்னதாக கட்சி விட்டு கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும் , கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.வியாழேந்திரனும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

மைத்திரி,மகிந்த கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், எஸ்.எஸ்.வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: