தமிழ்லீடர்

“கட்டுகஸ்தோட்டையில் ஐஸ் போதைப் ​பொருள் விற்பனை”

கட்டுகஸ்தோட்டை நகரில் போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது பயங்கரமான நிலையெனவும், ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போதைப் பொருள் வர்த்தகத்தால் நாட்டின் எதிர்கால சந்ததியே அழிவை எதிர்நோக்கி உள்ளார்கள். ஜஸ் எனப்படும் போதைப்பொருள் கட்டுகஸ்தோட்டையில் சில மருந்தகங்களிலும், விற்பனை செய்து வருவது உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் நாள்களில் பொலிஸ் விசேட படையணியினர் குறித்த பிரதேசத்துக்கு ரோந்து சேவையாற்றுவார்கள் எனவும், எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.                               

 

Add comment

Recent Posts

%d bloggers like this: