கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாகவும்,
விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாவும்,
விமானத்தில் இருந்த நோயாளி கட்டுநாயக்க விமான நிலைய வைத்தியப் பிரிவிடம் ஒப்படைத்ததன் பின்னர்,     அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

29 வயதான ருமேனியா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டதாகவும்,
தரையிறக்கப்பட்ட விமானம் 97,74,000 ரூபாய் பெறுமதியான விமான எரிபொருள் நிரப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டுள்ளதாகவும், விமானம் தனது பயணத்தை இரத்து செய்துள்ள நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் 443 விமான பயணிகள் மற்றும் 21 ஊழியர்கள் பயணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: