தமிழ்லீடர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வியட்நாம் பிரஜைகள் ஐவர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐவரும் 30 வயதுடையவர்களெனவும், ஐவரும் கடந்த 18ஆம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் மலேசியாவிலிருந்து மலிந்தோ விமான சேவையான ஓ.பி.185 என்ற விமானம் மூலம் 60 வயதுடைய தென்னாபிரிக்க பிரஜையொருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் இன்று காலை 11.05 மணியளவில் யுக்ரேன் நோக்கி செல்வதற்காக வந்தபோதே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: