தமிழ்லீடர்

கண்டி மாத்தளை வீதியில் அக்குறணை நகரில் நேற்று இடம் பெற்ற வாகன விபத்து.

கண்டி மாத்தளை வீதியில் அக்குறணை நகரில் நேற்று 04 ம் திகதி காலை ஏற்பட்ட  வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 04 ம் திகதி காலை சுமார் 6 மணி அளவில் தம்புள்ளை பிரதேசத்தில் இருந்து கண்டியை நோக்கிய அதிக வேகத்தில் பயனித்த ஜீப் வண்டி ஒன்று தடம் புரண்டு சுமார் 45 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு எதிரே வந்துள்ள கப் ரக வாகனம் ஒன்றில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ள ஜீப் வண்டியில் பயணித்த நால்வர் அக்குறணை வைத்திய சாலையில் அனுமதித்த போதும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மூவரும் மேலதிக சிகிற்சைக்காக கண்டி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இவ் விபத்தில் உயிரிழந்தவர் ஹபரண பிரதேசத்தை சேர்ந்த ருசிர ஜயசங்க என்ற 28 வயதுடைய இளைஞ்னராவார்.

இவரது சடலம் தற்போது அக்குறணை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,நேற்று பிரேத பரிசோதனை இடம் பெற்றதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஏகநாயக்க இலங்கசிங்க தலமையில் போக்குவருத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: