தமிழ்லீடர்

கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானது.

கதிர்காமம் யாத்திரைக்காக களுத்துறையில் இருந்து சென்ற பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. புந்தல – கிரிந்த பிரதான வீதியின் ஊரனிய சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த 13 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் மற்றைய இருவர் தெபரவெவ ஆதார மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: