தமிழ்லீடர்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்களால் புனிதமான இடமாக வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை விதைத்த துயிலும் இல்லங்கள் மரியாதைக்குரிய இடமாகவும் கருதப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலை வீரர்களான மாவீரர்களை விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த 2009 ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009 ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகள் மீது வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் போர் தொடுத்த இலங்கை இராணுவம் பலரைக் கொன்றொழித்ததுடன் தமிழர்களின் வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கித் துவம்சம் செய்துள்ளார்கள்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் இராணுவத்தால் இடித்து தரமட்டமாக்கப்பட்டது. சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களது உறவுகளால் துயிலும் இல்லம்  துப்பரவாக்கப்பட்டு கார்த்திகை-27 இல் மாவீரர் நாளை நடத்திவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை விதைத்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிப்பதற்காகப் பலர் முயற்சித்து வந்தபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு ஒருபகுதி மதிலமைப்பு வேலைகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில் இனவிரோதிகளின் செயலால் மதில் அமைக்கும் பணிகளில் தடைகள் ஏற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் விரோதிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள பற்றிகள் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவினர் அங்கு சென்று நிலமையை பார்வையிட்டுள்ளதாகவும்,
எமது இன விடுதலைக்காப் போராடி தங்கள் இன்னுயிர்களையே எமக்காக உவந்தளித்த எமது உறவுகளான மாவீரர்களுக்கு நன்றிக் கடனும் செய்ய முடியாதெனவும் தெரிவித்தார்.

அவர்களை நினைவுகூரும் இவ்விடத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குக்களைக்கூட விட்டுவைக்காது திருடிச்சென்ற விசமிகளுக்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.             

Add comment

Recent Posts

%d bloggers like this: