கல்லடி பாலத்தில் வீழ்ந்த சிறுமி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில்  பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகத்திற்கு அருகில்  உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (05) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்தபோதும் குறித்த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போன சம்பவமும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இதனையடுத்து குறித்த சிறுமியை  ஆற்றில் தேடிவந்த நிலையிலேயே அச்சிறுமி சடலமாக ஆற்றிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2ம் குறுக்கு வீதியைச்  சேர்ந்த 16 வயதுடைய  கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற  இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் பிற்பகல் 2 மணியளவில்  சம்பவத்தின் போது கல்லடி பாலத்தில் காதலன் மற்றும் காதலனின் நண்பருடன் சந்தித்த நிலையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காதலனுக்கு நீந்த தெரியாத காரணத்தினால் காதலனுடைய நண்பன் அச்சிறுமியை காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதனால் நீந்தி கரைசேர்ந்தாகவும் அவரின் சடலத்தை காணமுடியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் ஊடாக தெரியவித்துள்ளார்கள்.                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: