தமிழ்லீடர்

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்!!!

கித்துல்கல – களுகொவ்தென்ன பகுதியில் களனி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி இந்த இளைஞன் நேற்று மாலை நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற குறித்த இளைஞன், கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். நீரில் மூழ்கிய இளைஞனை கித்துல்கல காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடி வருவதாக தெரியவருகின்றது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: