தமிழ்லீடர்

காணாமல் போனோருக்கு மரணச் சான்றித​ழ் வழங்கப்படவில்லை!

காணாமல் போனவர்கள் சார்பாக, எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது நசீர், கேள்விகளை கேட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் சார்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை, அமைச்சரால் சொல்ல முடியுமா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கேள்விக்கு, ஆளும் கட்சியின் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, சபைக்கு ஆற்றிய பதிலிலேயே, எந்தவொரு மரண சான்றிதழும் இதுவரையில் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

 

Add comment

Recent Posts

%d bloggers like this: