காருக்குள் இருந்து தீப்பற்றி எரிந்த நபர்!

மொனராகலை பொலிஸ் பிரிவில் உள்ள வீதி ஒன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தமையினால் நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதிக்குள் வைத்து வாகனம் தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், அந்த வாகனத்தில் பயணித்த நபரும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதான டிப்போ வீதி பிரதேசத்தை சேர்ந்த நபர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை இந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட  மோதலினால் கெப் வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: