தமிழ்லீடர்

காவியா பெண்கள் நிறுவனத்தின் சுயதொழில் ஒன்றுகூடல்.

காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் பயனாளிகளின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் வை.எம்.சி. மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 4000 ஆயிரம் அங்கத்துவ பெண்களையும், 2000 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்ட காவியா பெண்கள் நிறுவனத்தின் சுயதொழில்  ஊடாக பயன்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திச்செல்லும் பயனாளிகளின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி.யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மட்டகளப்பு மாவட்ட அரசாங்க மேலதிக அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் அதிதிகளாக கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர்                     எஸ் .ராஜ்பாபு, மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே .பி .தங்கவேல், காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் ஆலோசகர் ஆர்.சிவபிரகாசம், வர்த்தக சம்மேளன இணைப்பாளர் கே.குகதாஸ் மற்றும் இந்நிகழ்வில் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவாக  உத்தியோகத்தர்கள் பயனாளிகள் பாடசாலை மாணவர்கள் உட்பட சகலரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

வருடாந்தம் நடைபெறும் பயனாளிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல கலாசார நிகழ்வுகளும் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் ஊடாக பயன்பெறும் பயனாளிகளின் குடும்பம்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை  உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

%d bloggers like this: