தமிழ்லீடர்

கிணற்றுக்குள் இறங்கிய அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென ஏற்பபட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்வாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பாலித தேவப்பெரும குழுவினர் கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சாதாரண மீட்பு குழு போன்று அமைச்சர் என்ற பெருமையை மறந்து கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கிணற்று நீரை இறைத்து கொடுத்துள்ளார்.           

Add comment

Recent Posts

%d bloggers like this: