தமிழ்லீடர்

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை தேசியபாடசாலைகளாக தரமுயர்த்த திட்டம்!!!

நாடளாவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்கும் கல்வி அமைச்சின் கொள்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் ஆறு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

மேற்படி கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலயம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, களுதாவளை மத்திய மகா வித்தியாலயம், பொத்துவில் முஸ்லிம் மஹா வித்தியாலயம், சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, அம்பாறை பண்டாரநாயக்க பாளிகா ம.வி. ஆகிய ஆறு பாடசாலைகளும் இதுவரை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் 32 தேசிய பாடசாலைகள் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 38ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மாகாண சபையால் நிருவகிக்கப்படும் பல முன்னணி பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு மத்திய கல்வி அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவது குறித்தும் மாகாண சபை பாடசாலைகளை தேசிய பாடசலைகளாக தரமுயர்த்துவதில் கல்வி அமைச்சு காட்டும் அக்கறை குறித்தும் கிழக்கு மாகாண கல்வித்துறைசார் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: