தமிழ்லீடர்

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக துறைநீலாவணையினைச் சேர்ந்த சரவணமுத்து நவநீதன்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக துறைநீலாவணையினைச் சேர்ந்த இலங்கை நிருவாகசேவை அதிகாரி சரவணமுத்து நவநீதன் பொதுச்செவை ஆணைக்குழுவினால் இவருக்கான மீள்நியமனத்தை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக பதவியில் இருந்த சரவணமுத்து நவநீதன் சிலகாலம் கனடாவில் புலம்பெயர்ந்து 12வருடகாலம் வாழ்ந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக்கொண்ட சரவணமுத்து நவநீதன்  கல்முனை உவெஸ்லிக்கல்லூரியிலும்,கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றவராவர்.

தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவர் கல்வியமைச்சின் உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார்.

இவர் துறைநீலாவணையினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபார்  அமரர் எஸ்.சரவணமுத்து அவர்களது புதல்வர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: