குடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு!!!

கந்தளாய் பிரதேச பட்டஹதர பகுதியில் குடிபோதையில் வந்த சிலர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தவர்களை அடித்து தாக்கிவிட்டு பெண் ஒருவரை கற்பழித்துள்ள கொடூர சம்பவம் ஒன்று கந்தளாயில் பதிவாகி  உள்ளது.

மேலும் பட்டஹதர பகுதியில் உள்ளகுளத்தில் கந்தளாய் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவரின்  குடும்பத்தினர்  மற்றும் உறவினர்களே  நீராடிக்  கொண்டு இருந்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

மேற்படி 10 பேர் காயங்களுக்கு  உள்ளாக்கி கந்தளாய்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் கந்தளாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர் அடங்குவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் கந்தளாய்  பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அத்துடன்  அதே பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: