குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

இன்று காத்தாங்குடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் தற்போது 50 வயது  குடும்பஸ்தர் ஒருவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காத்தாங்குடி பொலீஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில் குடும்பத் தகராறு காரணமாக மன விரக்தியடைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நபரது சடலத்தை மீட்கும் பணியில்  கடற்படையினர் மற்றும் பிரதேசவாசியினர்,மீனவர்கள் என பலரும் தேடிவருவதாக காத்தாங்குடி பொலீஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: