குளிக்க சென்ற யாழ் மூன்று மாணவர்கள் பலி!

சப்ரகமுவ பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் பொலிஹூல் ஓயா, பஹன்துடா நீர்வீழ்ச்சிக்கு நேற்று பிற்பகல் குளிக்க சென்ற போது  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிய வந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 25 வயதான செல்வரட்ணம்  திசான், 23 வயதான சரவணபவன் கோபிசன், 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே உயிரிழந்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த மாணவர்கள் மேலும் சில மாணவர்களுடன் நேற்று  நீர்வீழ்ச்சியில்  குளிக்க சென்றுள்ளனர். அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து  விசாரணைகளும் முடிந்த பின் அவர்களின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு  உடல்கள் அனுப்பிவைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: