தமிழ்லீடர்

குவைத் – ஸ்ரீ லங்கா நட்புறவுத் திட்டத்தின் கீழ் அல் நூர் தர்மஸ்தாபன அமைப்பினால் குடிநீர் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாநகர எல்லைப் பிரிவினுள் குவைத் – ஸ்ரீ லங்கா நட்புறவுத் திட்டத்தின் கீழ் அல் நூர் தர்மஸ்தாபன அமைப்பினால் மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

மாநகரசபை பிரிவினுள் 17 நீர்த்தாங்கிகள் 1.7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாகவும், அதன் முதற் கட்டமாக நாவற்குடா, கல்லடி சந்தை வளாகத்தில் நீர் வழங்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான மொகமட் உசனார் மொகமட் நிப்லார், சீ.ஜெயந்திரகுமார், ம.நிஸ்கானந்தராஜா, சிவம் பாக்கியநாதன் மற்றும் அல் நூர் தர்மஸ்தாபன அமைப்பின் இணைப்பாளர்கள் கலந்து கொண்டு நீர் வழங்கல் திட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள்.                             

Add comment

Recent Posts

%d bloggers like this: