தமிழ்லீடர்

கென்யாவின் விசேட அழைப்பையேற்று சென்ற ஜனாதிபதி!

கென்யாவின் நயிபோர் நகரில் நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சூழலியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கென்யாவின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை அங்கு சென்றுள்ளார்.

கென்யா ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சவால்கள், நிலையான நுகர்வு, உற்பத்திக்கான புதிய தீர்வுகள், என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த மாநாடு 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில்,
இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (14) விசேட உரையாற்றவுள்ளாரென குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Add comment

Recent Posts

%d bloggers like this: