தமிழ்லீடர்

கைதாகிய இரு பொலிஸார் இடமாற்றம்!

திருகோணமலை சேருநுவர பகுதிலில் புதையல் தோண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளே  இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துளளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சேருநுவர பகுதியில் புதையல் தோண்டுதலில் ஈடபட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளையும் உதவி பொலிஸ் தலைமையக காரியாலயத்தில் இருந்து உடனடியாக கரடியனாறு மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Add comment

Recent Posts

%d bloggers like this: