தமிழ்லீடர்

கையில் ஆயுதத்துடன் மீண்டும் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்த காலக் கட்டத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்.அதனாலே பல விடயங்களை செய்தார். அந்த நம்பிக்கையின் பிரதிபலனாக பல்வேறு விதமான ஆபரணங்களை அணிந்திருப்பார்.

அத்தோடு இந்திரப் பதவியை வகித்த இந்திரனின் கைளில் உள்ள வஜ்ஜிராயுதத்தை ஒத்த சிறிய ஆயுதமொன்றை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலிருந்து தனது கையில் வைத்திருந்தார்.

அந்த ஆயுதம் கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த காலப்பகுதியில் வைரலாக பேசப்பட்டது. பின் ஜனாதிபதி பதவி பறிபோன பின்னர் சிறிது காலம் அந்த ஆயுதத்தை கையில் எடுக்காதிருந்தார்.

ஆனால் தற்போது பிரதமராக பதவியேற்றதன் பின்னர் குறித்த ஆயுதத்தை மாற்றி விட்டு கையில் அடங்கக் கூடிய அளவில் நீண்டதும் மெல்லியதுமான ஒரு ஆயதத்தை வைத்துள்ளார். இவ் விடயத்தை சிலர் விமர்சனத்திற்கும் உள்ளாக்கியுள்ளனர். அதன் கீழ்ப்பகுதி புலியின் நகம் போலுள்ளது. இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: