தமிழ்லீடர்

கையெழுத்து வேட்டை ஆரம்பம்.ஈழத்து பிரச்சனையை தீர்க்க வரும் அமெரிக்கா!!!

வடகிழக்கில் முக்கிய பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட்டு தமிழ் மக்கள் ஏற்கத்தக்க தீர்வு ஒன்றினை முன்வைக்கவேண்டும் என்று கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இலங்கையில் இடம் பெற்ற யுத்த மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிவிடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றில் நேரடியாக அமெரிக்கா தலையிட்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றுவருகிறது.

வடக்கு கிழக்கு காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் பங்களிப்புடனும் 5 ஆவது கட்டமாக கையெழுத்துச் சேகரிக்கும் நிகழ்வு நேற்றும் இன்றும் மன்னாரில் இடம் பெற்றது.மேலும்மன்னார் தற்காலிக அரச பேருந்து நிலையத்தில் கையெழுத்து போரட்டம் இடம் பெற்றதுடன் இன்று காலையும் மன்னாரில் இடம்பெற்றது.

எனினும் குறித்த கையெழுத்துப் போரட்டமானது வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் பெறப்படவுள்ளதுடன் தற்போதுவரை யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பெறப்பட்ட நிலையில் இன்றைய தினம் மன்னாரில் பெறப்பட்டது.

மொத்தாமாக மூன்று லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அனைத்து கையொப்பங்களும் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது.அதே நேரத்தில் தற்போதுவரை சுமார் ஒரு லட்சத்து இருபத்து ஏழாயிரம் கையெழுத்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: